இரா.பிரபாகரன்,பி.எஸ்.சி பிஎல் வழக்குரைஞர் , கோயமுத்தூர்
93445 32137 கோயமுத்தூர்
06.03.2014
ஜூனியர்விகடன் வாரஇதழில் 06.4.2014தேதியிட்ட
இதழில் வெளியான தமிழருவிமணியனின் தமிழக காங்கிரஸ் தொண்டர்களுக்கு எழுதிய திறந்த மடல்
என்ற பெயரில் வெளியான தமிழருவி மணியனின் கருத்துக்கள் சரிதானா?
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இந்த மாதிரியான
விமர்சனங்களுக்கு அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிப்பதில்லை. அதுதான் தமிழ்நாடு காங்கிரஸ்
கமிட்டியின் பலவீனம் என்று நினைக்கின்றேன். தமிழருவி மணியனின் பொருத்தமற்ற கதைகளை விட்டுவிட்டு
அவரின் முரண்பாடான வாதங்களுக்கு மட்டுமே நான் பதில் சொல்லவிரும்புகின்றேன். தமிழருவி
மணியன் நேரு பரம்பரை மட்டுமே ஆள வேண்டுமா என்று கேட்கின்றார். தமிழருவி மணியன் காங்கிரஸில் இருந்தவரை அவருக்கு இது தெரியவில்லையா?
ஏற்கனவே இது குறித்து ஒரு நண்பர் எழுதிய கடிதம் ஜூனியர் விகடனில் வெளியாகியிருந்தது.
அதற்கு தமிழருவி மணியன் ஏதாவது பதில் சொல்லி இருக்கின்றாரா? வாரிசு அரசியல் நோய் என்று
கண்டதால் தான் தனது மனைவி மைத்துனர் அத்தனை நபர்களையும் அரசியலுக்கு கொண்டுவந்திருக்கும்
விஜயகாந்த், தனது மகனை அரசியல் வாரிசாக கொண்டு வந்திருக்கும் இராமதாஸ் ஆகியோர்கள் கொண்ட கூட்டணி ஏற்பட உழைத்தீர்களா? இந்தக்
கூட்டணிக்கு தலைமையேற்றிருக்கும் பாரதிய ஜனதாவில் புதுதில்லி உத்திரப்பிரதேசம் ஆகிய
மாநிலங்களில் பல வாரிசுகள் போட்டியிடுவது உங்களுக்கு தெரியாதா? நேரு குடும்பத்தின்
வாரிசுகளை சுட்டிக் காட்டுகின்ற நீங்கள் சீதாராம் கேசரி தலைவராகப் பொறுப்பேற்று காங்கிரஸ்
பலவீனமாக இருந்த நேரத்தில் தான் சோனியா காந்தி தலைமைப் பொறுப்பேற்று காங்கிரசினை அழிவிலிருந்து
மீட்டெடுத்தார் என்னும் வரலாற்றினை மறைப்பது சரிதானா?. உழைப்பவர்களுக்கு நல்ல தமிழ் பேசுபவர்களுக்கு
காங்கிரசில் வாய்ப்பு கிடைப்பதில்லை என்று சொல்கின்றார்களே. உங்களுக்கு சரியான வாய்ப்பு
காங்கிரசில் கிடைக்கவில்லை என்பது புரிகின்றது. நீங்களும் ஒரு காரணமாக இருந்து உருவான
தமிழக பா.ஜ கூட்டணியில் உங்களுக்கு என்ன கிடைத்தது. எனக்கு மன உளைச்சல் என்று கோயமுத்தூரில்
பேட்டியளித்தீர்களே ஏன்? காங்கிரசில் மட்டும்
பலமுறை ஏன் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படுகின்றது என்று கேட்கின்றீர்களே மோடி இராமன்
சிங் வசுந்தரா இராஜே சிந்தியா இராமன் சிங் இவர்களை விட்டால் வேறு திறமையான ஆட்கள் பாரதிய
ஜனதாவில் இல்லையா என்று நீங்கள் கேளுங்கள்
நான் உங்கள் நடுநிலைமையை பாராட்டுவேன்.காந்திய மக்கள் இயக்கம் என்பது உங்கள்
இயக்கத்தின் பெயர் இல்லையா? எனது ஆர்.எஸ்.எஸ்
ஆதரவு நண்பர்கள் காந்தியை மோசமாக பேசியதை விட வெள்ளைக்காரர்கள் கூட பேசியிருக்க மாட்டார்கள்.
ஆனால் நீங்கள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கைப்பாவை பாரதிய ஜனதாவிற்கு ஆதரவாக இருக்கின்றார்கள்.
என்ன மாதிரியான கொள்கைப்பிடிப்பு உங்களுடையது. ஞானசேகரனுக்கு ஒரு நகராட்சி வேட்பாளரை
கூட அறிவிக்கும் அதிகாரம் இல்லை என்கின்றீர்கள் . திமுக அதிமுக தேமுதிக தமிழ்நாடு பாரதியஜனதா
எல்லாக்கட்சிகளிலும் தொண்டர்கள் கூடி முடிவெடுக்கின்றனரா? எத்தனை வேட்பாளர்கள் மக்களால்
முடிவு செய்யப்பட்டனர் என்று சொன்னால் நான்
தெரிந்து கொள்வேன். ஈழப்போரினைப் பற்றி பேசுகின்றீர்கள். எனது ஞாபக சக்தி சரியாக இருந்தால்
போர் நடந்த சமயம் நீங்கள் காங்கிரசில் தான் இருந்திருக்க வேண்டும். அப்போது என்ன செய்து
கொண்டிருந்தீர்கள். ஒட்டு மொத்த தமிழகமும் தூங்கிக் கொண்டிருந்ததே அது போல தூங்கிக்
கொண்டிருந்தீர்களா? தூங்கியவர்கள் பரவாயில்லை விழித்துக் கொண்டிருந்த ஜெயலலிதா போரிலே
மக்கள் சாவது சகஜம் தான் என்ற பொன்மொழியை உதிர்த்தார். கருணாநிதி மூன்று மணி நேர உண்ணாவிரத
நாடகம் நடத்தினார். தமிழகத்தில் இலங்கைப்பிரச்சனையில்
ஜூனியர் விகடன் போன்ற பத்திரிக்கைகள் நிர்ப்பந்தம் வழக்குரைஞர்கள் போராட்டம் சிலபகுதியில் மாணவர்கள் போராட்டம் தவிர ஒட்டு மொத்த
தமிழகமும் அமைதியாக இருந்தது. இந்த நிலையிலும் மத்திய அரசு போர்ப்பகுதிகளில் இருந்து
அப்பாவி மக்கள் பாதுகாப்பாக வெளியேற இலங்கை அரசிற்கு நிர்ப்பந்தம் கொடுத்து இலங்கை
அரசும் அதற்கு ஒப்புக் கொள்ள வில்லையா? போர்ப்பகுதிகளிலிருந்து அப்பாவி மக்கள் வெளியேறுவதைத்
தடுத்து நிறுத்தியது யார்? விடுதலைப்புலிகள் இல்லையா? முள்ளி வாய்க்கால் முற்றம் ஒரு
ஆள் இல்லா காட்டுப்பகுதி இங்கு அப்பாவி மக்களுக்கு என்னவேலை அவர்களை அங்கு கொண்டு போய்
நிறுத்தியது யார் விடுதலிப்புலிகள் இல்லையா? ஏன் காங்கிரசை மட்டும் இலங்கைத் தமிழர்
பிரச்சனையில் குற்றம் சாட்டுகின்றீர்கள் அரசியல் இலாபத்திற்காக மட்டுமே. இலங்கை போர்க்குற்ற
வீடியோக்கள் தேர்தல் சமயங்களில் மட்டுமே வெளியாகின்றன. வீடியோக் கருவிகள் முன்பாக மட்டுமே
இலங்கையில் போர்க்குற்றங்கள் நடைபெற்றன என்று வைத்துக் கொண்டாலும் அவை தேர்தல் சமயங்களில்
மட்டுமே வெளியாவது அவற்றின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கவில்லையா. இலங்கைப் பிரச்சனையில் உங்கள் ஆதரவு பெற்ற பாரதிய ஜனதாவின் நிலை என்ன? தனியாக தமிழீழம் உருவாக்கித் தருவதாக பாரதிய ஜனதா
வாக்குறுதி அளித்திருக்கின்றதா? தமிழருவி மணியன் தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குபவர்
மாதிரி நடிப்பவர்களை எழுப்ப முடியாது. உங்களை மாதிரி நாஞ்சில் சம்பத் மாதிரியான பேச்சு வியாபாரிகளின் பேச்சுக்கள் உண்மைகளைத் திரித்து
மக்களின் மனதில் வெறுப்பினை விதைக்க மட்டுமே உதவும். நீங்கள் எந்த முகாமிற்கு செல்கின்றீர்களோ அந்த முகாமிற்கு
மட்டுமே உதவும். நியாயத்தினை நீங்கள் பேசுவதில்லை.பாண்டிய மன்னன் அவையில் நிற்கவைக்கப்பட்ட
கோவலன் போல தமிழக காங்கிரஸ் தனது தரப்பு நியாயத்தைச்
சொல்ல அனுமதிக்கப்படவேயில்லை. விசாரனையின்றி தண்டிக்கப்பட்ட காங்கிரஸ் தான் குற்றவாளிதான்
என்று நினைக்க ஆரம்பித்து விட்ட மாதிரி தெரிகின்றது . காங்கிரசிற்கு ஒரு குற்றமனப்பான்மை
guilty conscience உருவாக்குவதில் வெற்றி அனைவரும் வெற்றி பெற்றிருக்கலாம்.ஆனால் உங்கள்
சொந்த மனசாட்சி ஒரு நாள் உங்களை கேள்வி கேட்கும். அதற்கு நீங்கள் பதில் சொல்லித்தான்
ஆகவேண்டும் கடைசியாக ஊழல் குற்றச்சாட்டுக்கள் சொல்லியிருக்கின்றீர்கள் அதற்கு என்னுடைய
ஒரே பதில் காங்கிரஸ் மட்டுமே ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளானவர்களை புறக்கணித்திருக்கின்றது.
பாரதிய ஜனதா அரசியல் இலாபத்திற்காக மூத்த தலைவர்களின் எதிர்ப்பையும் மீறி ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளான எத்தனை பேருக்கு வாய்ப்பு
கொடுத்திருக்கின்றது என்று பாருங்கள். தமிழ்நாடு காங்கிரஸ் காமராசரை நெஞ்சில் சுமந்துகொண்டு
தான் இருக்கின்றது நீங்களும் கொஞ்சம் சுமந்து செல்லுங்கள் முரண்பாடான வாதங்களை நெஞ்சிலே
சுமப்பதை விட்டுவிட்டு.
இரா.பிரபாகரன்.
வழக்குரைஞர்
No comments:
Post a Comment