Tuesday, April 8, 2014

 பாரதிய ஜனதா அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சிவில் சட்டங்கள் அல்லது யூனிபார்ம் சிவில் கோடு பற்றி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கின்றது. அனைத்து மக்களுக்கும் பொதுவான சிவில் சட்டங்கள் இருக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா தெரிவிக்கின்றது. ஒவ்வொரு  மதத்திற்கும் திருமணச் சட்டங்கள் சொத்துரிமைச் சட்டங்கள் அந்த மதங்கள் வளர்ந்த சூழ்நிலையை பொருத்து இருக்கின்றன. இஸ்லாம் இஸ்லாம் சமயத்தினை  சார்ந்த ஆண்கள் நான்கு பெண்களை ஒரே சமயத்தில் திருமணம் செய்ய அனுமதிக்கின்றது. இந்து மதத்தில் பல தார மணம் வழக்கத்தில் இருந்த போதும் இந்து திருமணச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு அது தடை செய்யப்பட்டது. பாரதிய ஜனதாவின் பிரச்சனையே இஸ்லாமியர் நான்கு பெண்களை மணக்க அனுமதிக்கப்பட்டிருப்பது என்று தான் நான் நினைக்கின்றேன். பாரதிய ஜனதாவினர் இதை இஸ்லாமிய ஆண்களுக்கு கிடைக்கும் சலுகையாக நினைக்கின்றனர் !  ஆகவே பொது சிவில் சட்டம் கொண்டு வரும் போது இந்து ஆண்களும் நான்கு மனைவிகள் வைத்துக் கொள்ளவும் தலாக் சொல்லவும் அனுமதிக்கப் படுவார்கள் ! என்று நினைக்கின்றேன். இது சலுகையா தண்டனையா என்று பல மனைவிகள் வைத்திருப்பவர்களைத் தான் நீங்கள் கேட்க வேண்டும். மனைவியர் தவிர் துணைவியர் பற்றியும் பொது சிவில் சட்டத்தில் சட்டம் செய்யப் பட வேண்டும் என்று தமிழகத்தில் நிறையப் பேர் ஆவலுடன் இருப்பீர்கள். மற்றபடி பொதுசிவில் சட்டத்தில் பாரதிய ஜனதாவிற்கு முஸ்லீம் திருமண வழக்கங்கள் தான் பிரச்சனையே தவிர சொத்துரிமை சட்டங்களில் அதிக கவனம் இருக்கின்ற மாதிரி தெரிய வில்லை. பொது சிவில் சட்டம் நாட்டின் எல்லா பிரச்சனையும் தீர்க்கின்ற மந்திரக் கோல் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் அதற்கு பாரதிய ஜனதா பொறுப்பல்ல.  இருந்த போதிலும் தனி நபர் சட்டங்களில் தலையிடுவது என்பது சாதரணமல்ல. பூர்வீகச் சொத்துக்களில் இந்துப் பெண்கள் பாகம் கோருவது என்பது 2005 க்கு பின்னர் தான் சட்டமாக்கப்பட்டது. பொது சிவில் சட்டம் கொண்டு வரும் போது எந்த மதத்தினருடைய சிவில் சட்டங்கள் சிறப்பானவை என்பது பிரச்சனையாகும். வேடிக்கை என்னவென்றால் அனேகமாக பாரதிய ஜனதாவின் பொது சிவில் சட்டங்களில் கிருஸ்துவ மத தாக்கம் அதிகமாக இருக்கும்.ஏனெனில் நாம் மேலை நாடுகளின் சம உரிமை பற்றிய கருத்துக்களை நாம் நகல் எடுக்கப் போகின்றோம் ஆனால்  கிறிஸ்துவ மத சட்டங்களில் கூட இன்னும் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கப்பட்ட மாதிரி தெரியவில்லை. எப்படியோ பொது சிவில் சட்டம் கொண்டு வந்து பாரதிய ஜனதா நாட்டின் எல்லாப் பிரச்சனையும் தீர்க்கட்டும்!

No comments:

Post a Comment