நதிநீர் இணைப்பு பற்றி வெளிப்படையாகக் கருத்து சொல்லி தமிழ்நாட்டில் அதிகம் விமர்சனத்திற்கு உள்ளானவர் இராகுல் காந்தி. அதிமுக தலைவர் ஜெயலலிதா சில கூட்டங்களில் தற்போது நதிநீர் இணைப்பு பற்றி பேசியுள்ளார். பாரதிய ஜனதா கூட்டணியினரும் நதிகள் இணைப்பு பற்றி பேசுகின்றனர். ஆனால் இந்த திட்டம் நடைமுறைச் சாத்தியமற்றது என்பது ஏற்கனவே பலமுறை விவாதிக்கப்பட்டது என்றுதான் நான் நினைக்கின்றேன். சில பத்திரிக்கைகளில் இது பற்றி புவியியல் நிபுணர்களின் கருத்துக்களும் வெளியிடப்பட்டுள்ளன. இருந்த போதிலும் நதிகள் இணைப்பு என்கின்ற கருத்திற்கு மக்களிடையே வரவேற்பு இருக்கின்றது. நதிகள் இணைப்பு நடைமுறை சாத்தியமற்றது என்பது மிகவும் வெளிப்படையான உண்மைதான். இந்தியாவின் நில அமைப்பினை மனதில் கொண்டால் இதை நீங்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியும். நதிநீர் இணைப்பு என்பது கங்கை நதியை மனதில் கொண்டு பேசப்படுகின்றது. இந்தியாவின் மற்ற எந்த நதிகளிலும் பங்கிடும் அளவிற்கு தண்ணீர் வரத்து இல்லை.கங்கை நதி உற்பத்தியாகும் இமயமலையிலிருந்து வட இந்தியா படிப்படியாக உயரம் குறைவதில்லை.காவிரியை எடுத்துக் கொண்டால் காவிரி உற்பத்தியாகும் குடகு மலையிலிருந்து காவிரி பாயும் பகுதிகளின் கடல் மட்டத்திலிருந்தான உயரம் படிப்படியாக குறைகின்றது. கங்கைச் சமவெளி அவ்வாறல்ல.கங்கை நதிப்படுகையின் பெரும்பகுதி கடல் மட்டத்திலிருந்து 100மீட்டர் உயரத்திலிருந்து 75 மீட்டர் உயரத்திற்குள்ளாக இருக்கின்றது. .இந்தியாவின் பெரும்பான்மையான நீர்ப்பாசனம் தேவைப்படும் பகுதிகள் கங்கைச் சமவெளியைவிட மிகவும் உயரமானவை. கங்கைச் சமவெளியை சுற்றி உள்ள இராஜஸ்தான் மத்தியப்பிரதேசம் ஜார்கண்ட் ஒரிஸ்ஸா ஆகிய பகுதிகள் கங்கைச் சமவெளியை விட உயரமானவை. தக்காணப்பீடபூமி எனப்படும் மகராஷ்டிரா, ஆந்திரா தமிழ்நாடு அடங்கிய பகுதிகள் பல இடங்களில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1200 மீட்டர் உயரத்திலிருந்து கிழக்கு நோக்கி சரிவடைகின்றன. பெரும்பாலான பகுதிகள் கடல் மட்டத்திலிருந்து 150 மீட்டர் உயரத்திற்கு மேல் அமைந்துள்ளன. கங்கையிலிருந்து இத்தகைய உயரமான பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வது பொருளாதார ரீதியாகவோ பொறியியல்ரீதியாகவோ அரசியல்ரீதியாகவோ சாத்தியமற்றது.இதை எல்லாம் மீறி நதிகளை இணைப்பேன் என்றால் மிகக் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு இந்தியாவிற்கு ஏற்படும். ஆகவே இராகுல் காந்தியின் விமர்சனம் மிகச் சரியானது . ஜெயலலிதா பொதுக்கூட்டங்களில் சொல்கின்ற இந்த நதிகள் இணைப்பு திட்டத்தினை விட சிறிய நீர்ப்பாசன திட்டங்கள் ஏற்புடையவை . உதாரணத்திற்கு அவிநாசி அத்திக்கடவு நீர் செறிவூட்டும் திட்டத்தினை எடுத்துக் கொள்ளுங்கள். சிறிய நல்ல திட்டம் குறைந்த அளவு நிதி போதுமானது. அடுத்தடுத்து வந்த திராவிட அரசுகள் இந்த திட்டத்திற்காக ஒரு செங்கல்லையும் கூட நகர்த்தவில்லை. கூரை ஏறி கோழி பிடிக்க முடியாவிட்டாலும் வைகுந்தம் கூட்டிச் செல்கின்றேன் என்று கூறுவதை ஜெயலலிதா நிறுத்த மாட்டார்.பொது மக்களும் கவர்ச்சிகரமான திட்டங்களை நம்புவார்கள். யதார்த்தத்தை ஏற்றுக் கொள்வதில்லை.
அவிநாசி அத்திக்கடவு திட்டம் பற்றிய மேலும் விபரங்களுக்கு:
http://avinashiathikadavu.blogspot.in/2013/05/blog-post.html
இந்தியாவின் டாபோகிராபிக் வரைபடத்தினை பாருங்கள்!:
நன்றி: http://www.mapsofindia.com
அவிநாசி அத்திக்கடவு திட்டம் பற்றிய மேலும் விபரங்களுக்கு:
http://avinashiathikadavu.blogspot.in/2013/05/blog-post.html
இந்தியாவின் டாபோகிராபிக் வரைபடத்தினை பாருங்கள்!:
நன்றி: http://www.mapsofindia.com
No comments:
Post a Comment