தமிழர்களுக்கு காங்கிரஸ் என்றைக்குமே உரிய இடம் அளித்திருக்கின்றது நிதி அமைச்சர்கள் சண்முகம் செட்டியார், சி.சுப்பிரமணியக் கவுண்டர், தற்போது நிதி அமைச்சர் ப.சிதம்பரம் என்று முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளனர். அய்யா மூப்பனாரின் ஆலோசனைகளை இந்திரா காந்தி அம்மையார் என்றும் மதித்துள்ளார். வாசன் கப்பல் துறை மணிசங்கர் அய்யர், சுதர்சன நாச்சியப்பன் பலரும் திறமையாகவும் கை சுத்தத்துடனும் தான் பணியாற்றிவருகின்றனர். ஆனால் தமிழகத்தில் காங்கிரஸ் மீது கூறப்பட்ட அவதூறுகளுக்கு உரிய முறையில் காங்கிரஸ் பதில் சொல்லவில்லை. நீதிமன்றத்திற்கு 20 வருடங்களாக நடையாக நடக்கின்ற வாய்தா வாங்குவதில் புதிய சரித்திரம் படைத்த ஜெயலலிதா போன்றோரின் மறுபக்கத்தினை மறைத்து வயிறு வளர்ப்பதற்காக குற்றச்சாட்டுக்கள் ஏதும் இல்லாத சோனியா இராகுல் போன்றோரின் மீது அவதூறு பேசுவோர் இருக்கின்ற வரை தமிழகத்தில் உண்மை வெல்லாது.
No comments:
Post a Comment