இலங்கைத்தமிழர் பிரச்சனையில் விடைதெரியாத கேள்விகள் நிறைய இருக்கின்றன. புலி ஆதரவாளர்களும் அப்பாவித் தமிழரை ஆதரிக்கின்றேன் என்ற பெயரில் காங்கிரஸ் எதிர்ப்பு அரசியல் செய்து பிழைப்போரும் இதற்கு பதிலளிக்க வேண்டும்.
1. இந்திய அமைதிப் படைக்கு எதிராக விடுதலைப் புலிகளும் இலங்கை ராணுவத்தினரும் கைகோர்த்தனர். இது சரியா தவறா?
2. இந்தியா இராசீவ் படுகொலைக்கு பின்னர் இலங்கைப் பிரச்சனையில் ஒதுங்கியே இருந்தது. இந்த நிலையில் இலங்கையில் இந்தியா தலையிடுவதற்கு என்ன முகாந்திரம் இருக்கின்றது.
3. இந்தியா ஒதுங்கி இருந்ததால் நார்வே நாடு இலங்கை அரசுக்கு விடுதலைப்புலிகளுக்கும் மத்தியஸ்தராக இருந்தது. நார்வே ஏற்பாடு செய்த போர் நிறுத்தத்தினை விடுதலைப்புலிகள் ஏன் ஒருதலைப் பட்சமாக முடிவுக்கு கொண்டு வந்து இலங்கையுடனான யுத்தத்தினை துவக்கினர்.
4. தமிழர்களுடன் அனுதாபத்துடன் இருந்த இரணில் விக்கரமசிங்கேவை ஏன் விடுதலைப் புலிகள் தோல்வியடையச் செய்தனர்.
5. கிழக்கு மாகாணத்தில் கருணா பிள்ளையன் ஆகியோர் பிரிந்து செல்ல யார் காரணம்?
6. இந்திய இராணுவம் உலகெங்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காப்புப் பணிகளில் பங்கேற்கின்றது. இந்திய இராணுவம் பற்றி உலகின் எந்த மூலையிலும் அவதூறான குற்றச்சாட்டுக்கள் வரவில்லை. இலங்கையில் மட்டும் ஏன்?
7.இலங்கை இராணுவத்தின் போர்க்குற்றங்கள் பற்றிய வீடியோக்கள் ஏன் இந்தியாவில் தேர்தல் நடக்கும் போது மட்டும் வெளியாகின்றன ? இந்த 2014 பொதுத் தேர்தலில் சானல் 4 வெளியிடுவதாகச் சொன்ன வீடியோ காட்சிகள் ஏன் வெளியாக வில்லை. வைகோ பாரதிய ஜனதா கூட்டணி காரணமா?
8. தஞ்சாவூரில் ஜெயலலிதா அரசு போர் நினைவுச் சின்னத்தினை இடித்த போது சீமான் போன்ற முட்டாள்கள் எங்கு போய் பதுங்கிக் கொண்டார்கள் ?
9. உச்ச கட்ட போரின் போது இலங்கை அரசு தமிழர்கள் பாதுகாப்பாக வெளியேற வழி செய்த போதும் விடுதலைப்புலிகளின் பகுதிகளிலிருந்து ஏன் தமிழர்கள் வெளியேற அனுமதிக்கப்படவில்லை.
10. தமிழர் இனப்படுகொலை நடந்ததாகச் சொல்லப்படும் முள்ளிவாய்க்கால் முற்றம் ஒரு ஆளில்லாத காட்டுப்பகுதி என்று கூறப்படுகின்றது. அங்கு அப்பாவி மக்கள் சென்றது எப்படி.
11. விடுதலைப்புலிகளின் ஆதரவாளராக தங்களை காட்டிக் கொள்ளும் சீமான் அமைப்பினர் விடுதலைப்புலிகளை நேற்றும் ஆதரித்தேன் இன்றும் ஆதரித்தேன் நாளையும் ஆதரிப்பேன் என்று சொன்ன ஒரே காரணத்திற்காக வைகோவை 1 ஆண்டு பொடா சட்டத்தின் கீழ் சிறையிலடைத்த, விடுதலைப்புலிகளின் தலைவரை கைது செய்து இந்தியா கொண்டு வரவேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவை ஆதரிப்பது ஏன்?
12.சீமான் காங்கிரசை மறைமுகமாக எதிர்ப்பதற்கான அதிமுக வின் ஐந்தாம் படையா?
13. இலங்கைப் பிரச்சனையில் போர் உச்சகட்டத்தில் நடந்த 2009 ல் ஏன் யாருமே போராட வில்லை.
14. மத்திய காங்கிரஸ் அரசு நிர்ப்பந்தம் காரணமாக இலங்கை அரசு அப்பாவித் தமிழர்கள் போர்க்களப் பகுதிகளிலிருந்து அப்பாவித் தமிழர்கள் வெளியேற வழி செய்தும் அப்பாவித்தமிழர்கள் போர்க்கள பகுதிகளிலிருந்து வெளியேற முடியாமல் போனதிற்கு யார் காரணம்?
15. ஜெயலலிதா போர்க்களத்தில் அப்பாவி மக்கள் சாவது சகஜம் என்று சொன்னார். அதாவது எத்தனை பேர் செத்தாலும் விடுதலைப்புலிகள் ஒழிக்கப்படவேண்டும் என்கின்ற கருத்தில் அவர் உறுதியாக இருந்தார். சோனியாவினை பழிப்பவர்கள் ஏன் ஜெயலலிதா கருத்தினை மட்டும் ஏற்றுக் கொள்கின்றனர்?
No comments:
Post a Comment