காங்கிரஸ் ஒர் பூர்ஷ்வா கட்சி என்ற கண்ணோட்டத்தினை தமிழக கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்படுத்தி வைத்திருக்கின்றன. காமராஜ் காங்கிரசில் இருந்த போதே இதுபோன்ற கருத்துக்கள் தமிழகத்தில் பரப்பப் பட்டிருக்க வேண்டும். பின்னர் ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகள் இந்தக் கருத்துக்களை தங்களுக்கு சாதகமாக நன்கு பயன்படுத்திக் கொண்டன. பூர்ஷ்வா என்கின்ற கருத்தினை பரப்பிய கம்யூனிஸ்ட்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் வட்டார தலைவர்கள் செல்வாக்கு பெற காரணமாக இருந்தார்கள் என்று கூட சொல்லலாம். அதாவது கம்யூனிஸ்ட் புதிய பூர்ஷ்வா கூட்டம் ஒன்றினையும் அவர்களை வழிபடும் மாநில் அளவிலான தலைவர்களையும் உருவாக்கி வைத்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் பாருங்கள் தா.பாண்டியன் இந்த காம்ரேட் செயலலிதாவினை புகழ்ந்ததைப் போல் அண்ணா திமுக ஆண்களும் கூட செய்திருக்க முடியாது. அண்ணா திமுக ஆண்கள் உடல் மொழியில் செயலலிதாவிடம் பேசுவார்கள். அதாவது கீழே விழுந்து மேலே எழுந்திருக்காமல் இருந்தால் சரணாகதி அவ்வளவு தான் பெற்ற தாய் தகப்பன் இவர்களுக்கு கொஞ்சம் சுயமரியாதையை கற்றுக் கொடுத்திருக்கலாம். அடிமை வர்க்கத்தின் மீட்பர்களாக தன்னைக் காட்டி கொள்கின்ற கம்யூனிஸ்ட்களும் இந்த அடிமை ஆண்களுக்கு விமோச்சனம் அடையும் வழியை காட்டவில்லை. எல்லாம் இருக்கட்டும். காங்கிரசினை கடுமையாக விமர்சிக்கும் காம்ரேடுகள் அவர்கள் உருவாக்கி விட்ட குட்டி வட்டாரத்தலைவர்களிடம் ஏதாவது பெற்றார்களா என்றால் எல்லா வட்டாரத்தலைவர்களும் கம்யூனிஸ்ட்களை துரத்தி விட்டார்கள். கம்யூனிஸ்ட்களின் அரசியல் அங்கீகாரமே கேள்விக்குறியாகத்தான் இருக்கின்றது. காங்கிரசின் அப்பாவித்தனமான பண்ணையார் பாணி விவசாயப் பின்ணணி கொண்ட தலைவர்களை விமர்சித்த கம்யூனிஸ்ட்கள் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் , தொலைக்காட்சிகள் , ஆடம்பர பங்களாக்கள் தனிவிமானம் திராட்சை தோட்டங்கள் என்று ஆடம்பர வாழ்க்கை வாழும் குட்டித்தலைவர்களிடம் குழைந்து நெளிந்து வீணாகிப் போனதைப் பாருங்கள். வால் ஒன்று இல்லை நிறைய தமிழக ஆண்களிடம் இருந்தால் அதையும் ஆட்டிக் கொண்டிருப்பார்கள். ஆனால் ஆச்சரியம் பெண்கள் காலில் விழுவதில்லை. தமிழகப் பெண்களிடம் கொஞ்சம் சுயமரியாதை மிச்சம் இருக்கின்றது
No comments:
Post a Comment