Monday, April 7, 2014

    தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சியை எதற்கு வேண்டுமானலும் குறை சொல்வது பலருக்கு வழக்கமாக ஆகி வருகின்றது. பல பிரச்சனைகள் தேவையில்லாமல் உணர்வுபூர்வமான பிரச்சனைகளாக மாற்றப்படுகின்றன. கெய்ல் நிறுவனத்தின் எரிவாயுக் குழாய் பதிக்கும் பிரச்சனையை எடுத்துக் கொள்ளுங்கள். தமிழக பவர்கிரிட் கார்ப்பரேஷன் தமிழக மெங்கும் விவசாய நிலங்களில் மிகப் பெரிய கோபுரங்கள் அமைத்து மின்பாதைகளை ஏற்படுத்துகின்றது. இத்தகைய மின்பாதைகள் தமிழக விவசாயத்தினை மிகவும் பாதிக்கின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. குறிப்பாக தென்னை போன்ற மரப்பயிர்கள்  மின்பாதையின் அருகாமையில் பயிரிடவே முடியாது. ஆனால் இதற்கு தோன்றாத எதிர்ப்பு கெயில் நிறுவனத்தின் எரிவாயு பதிக்கும் திட்டத்திற்கு எழுந்தது ஏன் ? இத்தனைக்கும் மின்பாதைகளை விட இந்தத்திட்டம் விவசாயத்தினை குறைந்த அளவே பாதிக்கும். ரியல் எஸ்டேட் குண்டர்கள் சாதரண விவசாயிகளை தூண்டி விட்டதால் இந்தப் போராட்டம் பெரிய அளவில் நடந்ததா என்று தான் நான் சந்தேகப்படுகின்றேன். பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலமெடுத்ததற்கு இன்னும் விவசாயிகளுக்கு பணம் தரவேண்டியுள்ளது. அடுத்தடுத்த வந்த மாநில் அரசுகள்  இதுவரை விவசாயிகளுக்கு சேர வேண்டிய பணத்தினைத் தரவில்லை.  இதைப் பற்றியெல்லாம் யாரும் கேட்பதேயில்லை. மாநில அரசிடம் குறிப்பாக ஜெயலலிதா தலைமையிலான அரசிடம் கேட்டால் உதை கிடைக்கும் என்ற பயமாக இருக்கலாம். மத்திய அரசினைக் குறை சொல்வது எளிது. மத்திய அரசு  காங்கிரஸ் அரசு எப்போதும் தனது தவறுகளைத் திருத்திக் கொள்ள முயல்கின்றது. இரண்டாவது மத்திய அரசினைக் குறை சொன்னால் யாரையும் கண்டு பயப்படவேண்டியதில்லை. உங்களை ஒரு போராளியாகக் காட்டிக் கொள்ளலாம். இலங்கைத் தமிழர் பிரச்சனையில் வழக்குரைஞர் போராட்டங்களை எடுத்துக் கொள்ளுங்கள். தஞ்சையில் தமிழ் ஆதரவாளர்கள் அமைத்த நினைவுச் சின்னத்தினை ஒரே நாளில் செயலலிதா தட்டி எறிந்தார். அதோடு அனைத்து தமிழ் போராளிகளும் தங்களது போராட்டத்தினை தூரத் தூக்கி எறிந்தனர். நெய்வேலியில் தொழிலாளி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தினை எடுத்துக் கொள்ளுங்கள். உடனே கடலூரில் ஒரு முட்டாள் கும்பல் மத்திய அரசிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துகின்றது. அட முட்டாள்களே பரமக்குடியில் போலிஸ் துப்பாக்கி சூட்டில் செத்துப் போனர்களே அந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக ஏதவாது போராட்டம் நடத்தினீர்களா இல்லையே. இப்போது ஒரு தனி மனிதன் உணர்ச்சிவசப்பட்டு நடத்திய தாக்குதலுக்கு மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றீர்களே தர்மபுரியில் மூன்று விவசாயக் கல்லூரி மாணவிகள் அதிமுகவினர் நடத்திய வன்முறையில் எரித்துக் கொல்லப்பட்ட போது உங்கள் வீரம் எங்கே போயிற்று. அண்டர் வேரை இருகக் கட்டிகொண்டு எங்கு பதுங்கி விட்டீர்கள் ஆகவே நண்பர்களே மத்திய அரசுக்கு சவால் விடும் இந்த மனிதர்களை கண்டாலே நீங்கள் அலற வேண்டியது தான்

No comments:

Post a Comment