நண்பர்களே அரசியலில் எல்லா சமயங்களிலும் பணம் வெற்றியைத் தேடித் தருவதில்லை. அதுவும் இன்றைய ஆம் ஆத்மி காலகட்டத்தில் அரசியலில் பணம் வெற்றியைத் தரும் என்பது சரியான கருத்து அல்ல. இதை ராகுல் காந்தி நன்கு உணர்ந்துள்ளார். பட்டா பர்சால் முதலிய இடங்களில் அவர் விவசாயிகளின் போராட்டங்களில் கலந்து கொண்டார் . மேலும் வேட்பாளரிடம் பணம் கிடைத்தால் தொண்டர்கள் முதலில் செல்வது டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு தான். மிகவும் குறைந்த தொண்டர்கள் உள்ள இடத்தில் அதிகமான பணத்தினை கொடுத்தீர்கள் என்றால் வேட்பாளருக்கு பணம் இழப்பு மட்டுமில்லாமல் இருக்கின்ற தொண்டரும் மதுக்கடையில் காணாமல் போய்விடுவார். தொண்டர்களை கூலிப்படை மாதிரி பயன் படுத்துவது தொண்டர்களின் உணர்வுகளை புண்படுத்துவது மாதிரி தான். பணம் இல்லாமலே நமது வேட்பாளர் வெல்வார். அதிக மக்கள் தொடர்பும் தொலைத் தொடர்பு நல்ல முறையிலே வளர்ந்துள்ள இந்தக் கால கட்டத்திலே ஜோதிமணி நல்ல வேட்பாளர் சாதரண குடும்பத்தினை சேர்ந்தவர் என்கின்ற செய்தியை அதிக நபர்களிடம் கொண்டு சேர்ப்பதும் முக்கியம்
No comments:
Post a Comment