காங்கிரஸ் தலைவர்கள் மீதான திட்டமிட்ட வெறுப்பு பிரச்சாரத்தின் பின்ணனி என்ன ?
காங்கிரஸ் தலைவர்கள் மீது திட்டமிட்ட வெறுப்பு பிரச்சாரமானது கடந்த சில வருடங்களாகவே நடத்தப்பட்டு வருகின்றது. ஊடகங்கள் வாயிலாகவும் அரசியல் அமைப்புகள் மூலமாகவும் நடத்தப்படும் இத்தகைய வெறுப்புப் பிரச்சாரத்திற்கு காங்கிரஸ் தகுந்த பதிலடி கொடுக்க தவறிவிட்டது. பாரதப்பிரதமர் மன்மோகன்சிங் மீது நடத்தப்படும் வெறுப்புப் பிரச்சாரத்திற்கு இந்துத்வா எண்ணம் கொண்ட வெளிநாடு வாழ் இந்தியர்கள் காரணமாக இருப்பார்கள் என்றே நான் கருதுகின்றேன். கடந்த பத்தாண்டுகளில் இருந்தது போல் வெகுஜனங்கள் அல்லது சாதரண மக்களுக்கு காங்கிரஸ் வேறு எந்தக் கால கட்டத்திலும் உதவிகரமாக இருந்ததில்லை.கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம் மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி தொடரும் உர மானியங்கள் முதலியன பெரு முதலாளிகளின் கோபத்தினை தூண்டி விட்டுருக்கவேண்டும். ஆங்கிலச் செய்தி ஊடகங்களில் தான் முதலில் வெறுப்புப் பிரச்சாரத்திற்கான விதைகள் ஊன்றப்பட்டன. பின்னர் வட்டார உணர்வு கொண்ட அரசியல்வாதிகளால் இது ஊதிப் பெரிதாக்கப்பட்டது. ஊழல் எதிர்ப்பு பிரச்சாரத்தினையே எடுத்துக் கொள்ளுங்கள். தில்லியில் முதலில் அன்னா ஹசாரே முன்னிலைப் படுத்தப் படுகின்றார். அந்தச் சமயத்தில் தான் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு முக்கியப் பொறுப்புக்களில் உள்ளோர் ஊழல் செய்தால் அவர்களை விசாரிக்கும் அதிகாரம் பெற்ற லோக் பால் அமைப்பினை நிறுவ முயற்சி செய்து கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் அன்னா ஹசாரே உள்ளே நுழைந்தார். அவர் நல்ல எண்ணம் கொண்டவராக இருக்கலாம். ஆனால் சட்டம் எப்படி செயல் படுகின்றது என்று புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் அற்றவர். சாதரணக் கடைநிலை ஊழியர் முதல் பிரதமர் வரை அனைவரையும் லோக்பால் வரம்பிற்குள் கொண்டு வரவேண்டுமென்று அவர் கூறி வந்தார். ஏற்கனவே கடைநிலை ஊழியர்களுக்கும் இதர அரசு ஊழியர்களுக்கும் ஊழல் தடுப்புச் சட்டம் 1986 என்ற சட்டம் அமலில் இருக்கின்றது. சில மாநிலங்களில் இதற்கு காவல் துறையில் தனியாகக் காவல் அதிகாரிகள் கூட இருக்கின்றார்கள். இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால் நீங்கள் பாதிக்கப்பட்டால் நீங்கள் தான் சென்று புகார் கொடுக்கவேண்டும். நீங்கள் புகார் கொடுக்க தயார் இல்லையென்றால் ஜன்லோக்பால் சட்டம் கொண்டு வந்தாலும் பயன் இருக்க போவதில்லை.ஆனால் இந்தப்பிரச்சனை பாரதிய ஜனதாவிற்கு ஆதாயம் கொடுக்கக் கூடிய வகையில் மாற்றப்பட்டது. குறிப்பாக காங்கிரஸ் அரசின் மீதான அவதூறுகள் மோடிக்கு அரசியல் ஆதாயமளிக்கும் வகையில் மாற்றப்பட்டது.இத்தனைக்கும் மோடி குஜராத் மாநிலத்தில் செயல்பட்டு வந்த லோக் ஆயுக்தா அமைப்பிற்கு நீதிபதி நியமனத்தில் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. குஜராத் பாரதிய ஜனதா அமைச்சர் பாபுலால் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் சிறையிலடைக்கப்பட்டார்.எதியூரப்பா, ரெட்டி சகோதரர்கள் மீண்டும் ஆதிக்கம் பெற மோடி உதவினார். பெரும்பாலான பத்திரிக்கைகள் இந்தச் செய்திகளை கண்டும் காணாமலும் இருந்தன. பத்திரிக்கைகளின் ஊழல் எதிர்ப்பு நோக்கம் கேள்விக்குரியானது தான் என்று இந்த செயல்கள் நிரூபித்தன. ஜெகன் மோகன் ரெட்டியின் 860 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு இறுதிக்கட்டத்தினை நெருங்கின்றது. இந்த வழக்கில் ஆயிரக்கணக்கான நிலங்களை ஜெயலலிதா வாங்கிக் குவித்ததாக அரசு தரப்பு குற்றஞ்சாட்டுகின்றது. அலைக் கற்றை ஊழல் இராஜா எந்த வித தடையுமின்றி நீலகிரி பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட திமுகழகம் வாய்ப்பளிக்கின்றது. ஆனால் ஊடகங்கள் தொடர்ந்து இதில் மவுனம் சாதிக்கின்றன. ஆனால் இராகுல் காந்தி சோனியா காந்தி ப.சிதம்பரம் ஏன் வாசன் கூட ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டப்படுகின்றது. ஊடகங்கள் ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவதில் காட்டுகின்ற அக்கறையை ஏன் ஆதாரமான ஊழல்களை வெளியிடுவதில் காட்டுவதில்லை. இந்துத்துவா லாபிகளின் திட்டமிட்ட வேலையா? காங்கிரஸ் தலைவர்களின் மீதான அவதூறு பாரதிய ஜனதாவிற்கு பயன் அளிக்கின்றது. பாரதிய ஜனதா தலைவர்களின் மீதான குற்றச்சாட்டுக்கள் பற்றி மவுனம் சாதிப்பது பாரதிய ஜனதாவிற்கு பயனளிக்கின்றது.ஊடகங்களுக்கு பாரதிய ஜனதாவினால் பலன் கிடைக்கின்றதா? குறிப்பாக வேட்டி கட்டிய தமிழர் ப.சிதம்பரத்திற்கு ஊடகங்களின் எதிர்ப்பிற்கு காரணம் ஜெயலலிதாவின் மீதான சொத்து குவிப்பு வழக்கிற்கு ப.சிதம்பரம் காரணம் என்பதால் சிதம்பரத்திற்கு எதிராக செயல் படுவதன் மூலம் ஜெயலலிதாவின் கருணைப்பார்வை கிடைக்கும் என்பதாலேயே பல ஊடகங்கள் ப.சிதம்பரத்திற்கு எதிராக இருக்கின்றன என்ற கருத்து தமிழகத்தில் நிலவுகின்றது. மின்வெட்டு விவகாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் . மூன்று வருடத்தில் என்ன தான் மின் உற்பத்தி திறனை அதிகரித்தீர்கள் என்று ஜெயலலிதாவிடம் கேட்கும் துணிச்சல் தமிழக பத்திரிக்கையாளர்களிடம் இல்லை.ஜெயலலிதா எங்கு தான் மின் உற்பத்தி நிறுவனம் நிறுவி இருக்கின்றார் . ஆச்சரியம் தான். ஆனால்ஜெயலலிதாவிற்கு ஆதரவான பிராம்மின் லாபி ஒன்று இண்டெர் நெட்டில் இயங்கி ஜெயலலிதா புகழ் பாடுகின்றது. பொதுமக்கள் செத்தாலும் விடுதலைப்புலிகள் ஒழிக்கப்படவேண்டும் என்று விரும்பிய ஜெயலலிதாவினை சீமான் மாதிரியான புலி ஆதரவு ஆட்கள் ஆதரிக்கின்றார்கள். இந்த மாதிரியான கேவலமான அரசியல் நடவடிக்கைகளை ஊடகங்கள் ஆதரிப்பது அதைவிட வேடிக்கையானது. இதற்கும் இந்துத்வா ஆதரவு லாபிகளே காரணம் என்று நான் நினைக்கின்றேன். இந்த இந்துத்துவா லாபிகள் முதலில் காங்கிரசினை இந்துக்களுக்கு எதிரான கட்சியாக சித்தரித்தன. அதில் பெரிய அரசியல் இலாபம் கிடைக்காததால் காங்கிரஸ் தலைவர்களை மக்கள் விரோதிகள் போல் சித்தரிக்க முயன்றன. அதற்கு ஊழல் பிரச்சனையை கையிலெடுத்தன. காங்கிரஸ் ஊழல் செய்தவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுத்த போதும் ஊடகங்கள் உதவியால் காங்கிரஸ் கட்சியை பலிகடா ஆக்க சுயநல சக்திகள் வெற்றி பெற்றனவா? என்பதற்கு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் விடை கிடைக்கும்

No comments:
Post a Comment