Sunday, April 13, 2014

உள்ளாட்சி அமைப்புகளை மாநில் அரசுகள் தங்கள் விருப்பம்போல் கலைக்கவும் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தாமலும் இருந்து வந்தன. இராஜீவ் காந்தி அவர்கள் காலத்தில் பஞ்சாயத்து இராஜ் சட்டத்தின் மூலம் பஞ்சாயத்துகள் அரசியல் சாசன அந்தஸ்து பெற்றன. இந்த பஞ்சாயத்து இராஜ் சட்டம் பலவிதத்தில் புரட்சிகரமானது. பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆதிதிராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. பெண்கள் பெருமளவில் பங்கேற்க பஞ்சாயத்து இராஜ் சட்டம் வகை செய்தது. மக்கள் கையில் அதிகாரம் கொடுத்த புரட்சிகரமான சட்டம் என்பதால் இந்தச் சட்டம் ஒரு மகத்தான சட்டம். ஆனால் உள்ளாட்சிகளில் இன்னும் நமது மக்களால் நல்ல பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க முடிவதில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரியது. விவசாயத்தினை பொருத்தவரை மத்திய அரசு உரமானியத்தினை தொடர்ந்து வழங்கி வருகின்றது. வருடம் சுமார் ஒரு இலட்சம் கோடி அளவில் உரமானியம் வழங்கப்பட்டுவருகின்றது. தேசிய தோட்டக் கலை இயக்கம் மூலமாக சிறுகுறு விவசாயிகளுக்கு 100 % மானியத்திலும் பெரிய விவசாயிகளுக்கு 75 % மானியத்திலும் சொட்டுநீர்  அமைக்க மத்திய அரசு மானியம் வழங்கி வருகின்றது. தோட்டக் கலை இயக்கத்தின் மூலமாக இதர மானியங்களும் வழங்கப்படுகின்றன.சர்வதேச அளவில் மிகக் கடுமையான விலையேற்றம் இருந்த போதும் பெட்ரோல் டீசல் தொடர்ந்து மானிய விலையில் அளிக்கப்படுகின்றது.இரயில்வே கட்டணங்கள் தொடர்ந்து மக்களைப் பாதிக்காத வகையில் பராமரிக்கப் படுகின்றன. ஊழலுக்கு எதிரான சட்டங்களைப் பொருத்த வரை சாதரண அரசு ஊழியர்கள் தவறு செய்தால் இலஞ்ச தடுப்புச் சட்டம் 1986 இராஜீவ் அவர்கள் காலத்திலேயே அமலுக்கு கொண்டு வரப்பட்டது. பிரதமர் உட்பட உயர் மட்டங்களில் ஊழல் நடைபெற்றால் அத்தகைய குற்றச்சாட்டுக்களை விசாரிக்க லோக்பால் சட்டத்தினை மத்திய அரசு கொண்டு வந்திருக்கின்றது. ஜன லோக்பால் பற்றி பேசுபவர்கள் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். எந்தக் குற்றத்தினை பற்றியும் பாதிக்கப்பட்டவர் புகார் செய்தால் தான் விசாரிக்க முடியும். ஏற்கனவே சாதரண அரசு ஊழியர்கள் தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்புச் சட்டம் இருக்கின்ற போதிலும் எத்தனை பேர் புகார் செய்கின்றனர். ஆகவே மத்திய அரசு கொண்டு வந்துள்ள லோக்பால் ஊழல் எதிர்ப்பு நடவடிககைகளில் ஒரு நல்ல முன்னேற்றம் தான். மேலும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மகத்தான சாதனை. 1923 ம் வருடத்திய அலுவலக இரகசியங்கள் சட்டம் என்ற வெள்ளைக்கார அரசாங்கத்தின் சட்டம் இதன் மூலம் இரத்து செய்யப்பட்டது. மேலும் உலக அரங்கிலேயே இத்தகைய சட்டம் ஒன்றினை கொண்டு வந்தது இந்தியாவாகத்தான்  இருக்கும். அரசு நிலமெடுக்கும் பணிகளில் பாதிக்கப்பட்டவருக்கு நிலத்தின் சந்தை மதிப்பினை நான்கு மடங்கு வழங்க வழி செய்யும் சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர்ந்து காலத்திற்குகொவ்வாத பழைய சட்டங்களை நீக்கிவிட்டு புதிய பொருத்தமான சட்டங்களை காங்கிரஸ் அரசு கொண்டு வந்துள்ளது.பொதுமக்கள் கொடுக்கும்  மனுக்களின் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காத அரசு ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது இத்தகைய மசோதா சட்டமாகவும் தொடர்ந்து சாதரண மக்களுக்கான ஆட்சி நீடிக்கவும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் .

No comments:

Post a Comment