Sunday, April 13, 2014

தமிழ்நாட்டில் மின் உற்பத்திக்கு ஒரு சிறு செங்கல்லையாவது எடுத்து வைத்ததாக திராவிடக் கட்சிகள் பொய்யும் கூட பேச முடியாத சூழ்நிலையில் தான் இருக்கின்றார்கள். தமிழ் நாட்டில் தனியார் முதலாளிகள் காற்றாலை மின்சாரம் மூலம் மின் உற்பத்தியை ஏற்படுத்தினார்கள். அந்த காற்றாலை மின்சாரத்தினை கொண்டு செல்வதற்கு கட்டமைப்பு வசதிகளைக் கூட திராவிடக் கட்சிகள் செய்ய வில்லை. காற்றாலை மின்சாரப் பிரிவுகளுக்கு பெரும் தொகையை தமிழ்நாடு மின்சார வாரியம் நிலுவையில் வைத்திருக்கின்றது. இத்தனைக்கும் காற்று வீசும் காலங்களில் தமிழ் நாட்டில் மின்வெட்டு இல்லாமல் இருப்பதை நீங்கள் காணலாம். கூடங்குளம் போன்ற மின் திட்டங்களுக்கு வந்த எதிர்ப்பினை அரசியல் இலாபம் கருதி ஜெயலலிதா தடுத்து நிறுத்த வில்லை. அனல் மின்நிலையங்களுக்கு பராமரிப்பிற்கு போதிய நிதி ஒதுக்கவில்லை. மின்வெட்டு குறித்து ஜெயலலிதா மூன்று விதமான கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றார். மத்திய அரசு போதிய மின்சாரத்தை வழங்கவில்லை. முந்தைய திமுக அரசு காரணம். போதிய உற்பத்தி இருந்தும் சதி காரணமாக மின் உற்பத்தி செய்ய முடியவில்லை. மூன்றும் ஒன்றுக்கொன்று பொருந்தாத தொடர்பற்ற காரணங்கள். மத்திய அரசினைப் பொருத்த வரை தமிழ்நாடு அரசு தென்னக மின் தொகுப்புடன் தமிழகத்தினை இணைக்க தமிழ்நாடு அரசு ஒத்துழைக்க வில்லை என்று குற்றஞ்சாட்டுகின்றது. இது நீங்கள் ஏற்க வேண்டிய பதில் தான்.ஏனெனில் காற்றாலைகளைத் தமிழக தொகுப்பில் இணைக்கவே தமிழக அரசு திறமையற்ற அரசாக இருந்தது. முந்தைய திமுக அரசு மின் உற்பத்தியை பெருக்க ஒன்றும் செய்ய வில்லை என்றால் அதிமுக அரசு என்ன செய்திருக்கின்ற்து .ஒரு மின் உற்பத்தி நிலையத்தினையாவது தொடங்கி இருந்தால் மக்கள் மன்றத்தில் முன் வைக்கலாமே. மின்வெட்டு ஏற்படுத்த சதி நடப்பதாக ஜெயலலிதா பேசுகின்றார். சதியை முறியடிக்க உங்களிடம் நிர்வாகத்திறமை இல்லை என்றால் நீங்கள் பதவி விலகலாமே ஜெயலலிதா

No comments:

Post a Comment