Sunday, April 13, 2014

சாதரண மனிதர்களின் கட்சியாக காங்கிரஸ் இருந்த போதிலும் பெரு முதலாளிகள் ஆதரவுடன் நடக்கும் பாரதிய ஜனதா பிரச்சாரத்தின் முன்பாக உண்மை ஊமையாக இருக்கின்ற மாதிரித்தான் தெரிகின்றது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் நூறு நாள் வேலைவாய்ப்பு கல்விக் கடன் போன்றவை வெறும் வாக்கு வங்கித் திட்டங்கள் அல்ல. இவை விளிம்பு நிலையில் வாழ்கின்ற மனிதர்களுக்கு பெரும் ஆதரவாக இருக்கின்றன. விவசாயக்கடன் தள்ளுபடி, விவசாயத்திற்கு தரப்படும் உரமானியம் போன்றவற்றினை பெரு முதலாளிகள் ஆதரிப்பதில்லை. இந்த வருடம் உணவு தானிய உற்பத்தியில் இந்தியா வரலாறு காணாத அளவு முன்னேறி இருக்கின்றது. விவசாய மானியங்கள் தொடர வேண்டும். சோனியாகாந்தி இது போன்ற திட்டங்களுக்கு தெரிவித்த ஆதரவு தான் இந்தத் திட்டங்கள் அமலுக்கு வரக் காரணம் சோனியா காந்தி அவர்களை பிடிக்காத இந்துத்வா ஆதரவாளர்கள் இணையத்திலும் ஊடகங்களிலும் நடத்தும் வெறுப்புணர்வு பிரச்சாரம் மக்களின் மனதில் தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கின்றது. இதன் காரணமாக மக்கள் மோடிக்கு ஆதரவாக இருப்பது போன்ற ஒரு தோற்றம் இருக்கின்றது. எனவே மிகத் திறமையானவரும் கடந்த 10 ஆண்டுகளாக புரட்சிகரமான சட்டங்களைக் கொண்டு வந்தவருமான சோனியா காந்தி அவர்களுக்கு நாம் ஆதரவு தெரிவிக்க வேண்டும். பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக நிலமெடுத்துக் கொடுத்த நரேந்திர மோடியா அல்லது நிலங்களுக்கு அவற்றின் சந்தை மதிப்பு போல் நான்கு மடங்கு இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்த காங்கிரஸா என்று மக்கள் தீர்மானிக்க வேண்டிய நேரம் இது. வளர்ச்சி அடித்தட்டு மக்களுக்கும் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கும் பெண்களுக்கும் சென்று சேர வேண்டும் என்று காங்கிரஸ் கடுமையாக முயற்சி எடுக்கின்றது. இந்த முயற்சிகள் தொடர்ந்து நடைபெற காங்கிரசிற்கு சாதரண மக்களின் ஆதரவு தேவை.


No comments:

Post a Comment