பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் ஆதரவாளர்கள் அவர்களே நம்பிக்கை வைக்காத சங்கதிகளை பிரச்சாரம் செய்வதில் வல்லவர்கள் . சாதரண பொதுமக்கள் மத்தியில் ஆகட்டும் அல்லது ஊடகம் ஆகட்டும் அல்லது இணையம் ஆகட்டும். அத்தகைய சங்கதிகளில் முக்கியமானது பொது சிவில் சட்டம். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தந்திருக்கும் அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவினை நீக்குதல், கருப்புப் பணம், மாடு பாதுகாப்பு,நதி இணைப்பு போன்றவை. பாரதியஜனதா தேர்தல் அறிக்கைகளிலும் பொதுக் கூட்டங்களிலும் இடம் இந்த சங்கதிகள் மீது பாரதிய ஜனதாவினருக்கு உண்மையிலேயே அக்கறை இருக்கின்றதா 1999 2004 ஆட்சிக்காலத்தில் பாரதிய ஜனதா இந்தக் கோரிக்கைகளுக்காக ஏதாவது செய்ததா என்பது புதியவாக்காளர்களுக்கு தெரியாது. இந்தக் கோரிக்கைகள் இராமர் கோயில் பாபர் மசூதி விவகாரம் மாதிரி பழைய விவகாரம் தான். இன்றைக்கு பல இலட்சம் கோடிகளில் பேசப்படுகின்ற கருப்புப் பண விவகாரத்தில் 1999-2004 ஆட்சிக்காலத்தில் பாரதிய ஜனதா பல ஆயிரங் கோடிகளை மீட்டிருக்கும் என்று யாராவது புதிய வாக்காளர் நினைத்தால் அது தவறு. அரசியல் ரீதியாக பிரச்சனைக்குரிய பொது சிவில் சட்டம் போன்ற விவகாரங்களை விட்டுவிடுங்கள். நதிகள் இணைப்பினை எடுத்துக் கொள்ளுங்கள். தேசிய அளவில் நதிகளை இணைப்பது சாத்தியமற்றது. பொருளாதார தொழிழ்நுட்ப சுற்றுச்சூழல் அடிப்படையில் நதிகளை இணைப்பது சாத்தியமற்றது. இதுபற்றி பாரதிய ஜனதா சிறு துறும்பினையாவது எடுத்துப் போட்டிருக்கின்றதா என்றால் இல்லை. இப்போது மறுபடியும் அதே பிரச்சனையை பேசுவது எதற்காக பாரதிய ஜனதா பிரச்சாரம் வலுவிழக்கும் போதெல்லாம் இத்தாலி பற்றி பேசுவது பாரதிய ஜனதாவின் வழக்கம். இந்த இத்தாலி கோஷம் மக்களால் மூன்றுக்கு மேற்பட்ட தேர்தல்களில் நிராகரிக்கபட்ட கோசம். நரேந்திர மோடி காங்கிரஸ் மாட்டிறைச்சி ஏற்றுமதியை ஊக்குவிக்கின்றது என்று பொதுக்கூட்டங்களில் பேசினார். ஆனால் குஜராத்தில் இருந்து அதிமாக மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்படுகின்றது என்பதை சுட்டிக்காட்டியவுடன் அதைப் பற்றி பேசுவதை நிறுத்திக்கொண்டார்.
No comments:
Post a Comment