நண்பரே கறவை மாடுகள் பெரும்பாலும் அப்பாவி விவசாயிகளினாலும் பெண்களாலும் வளர்க்கப்படுவதாலும் பராமரிக்கப்படுவதாலும்தொழிலில் லாப நட்டம் தெரியாத அவர்களின் உழைப்பு சுரண்டப்படுகின்றது. பால் விலை உயர்வு காய்கறிகளின் விலை உயர்வு குறித்து குரல் கொடுக்கின்ற நகர் புற மக்களும் அவர்களை திருப்தி செய்ய நினைக்கின்ற நிறைய அரசியல்வாதிகளும் விவசாயிகளையே பலிகடா ஆக்குகின்றன. நீங்கள் சொன்ன கணக்கினை விட தற்போது தீவனச் செலவு மிகவும் அதிகம். வைக்கோல் சுமார் இரண்டறைக் கிலோ அளவு 25 ரூபாயிற்கு விற்கப்படுகின்றது. கூட்டுறவு அமைப்புகள் தமிழ்நாடு அரசாங்கத்திடம் இருந்து விடுதலையடைந்து சுயமாக விலை நிர்ணயம் செய்தால் ஒரளவு கட்டுப்படியாகும் விலையை நிர்ணயம் செய்யலாம். விலை உயர்வுக்கு எதிராக கூச்சல் போடுவார் 100 மில்லி பாதாம் பாலுக்கு 80 ரூபாய் கொடுக்க தயாராக இருப்பார்கள். 100 மில்லி காப்பிக்கு 25 ரூபாய் தரத் தயாராக இருப்பார்கள்.ஆனால் விவசாயப் பொருளின் விலையை பற்றி மட்டும் கூக்குரலிடுவார்கள். மேலும் கூலிக்கணக்கும் அரசு அலுவலர்களுக்கு இணையாக நீங்கள் கணக்கிடவேண்டும். உங்கள் முதலீடு மாட்டிற்கு கொடுக்கும் விலை கட்டுத்தரைக்கு ஆகும் செலவுகள் இவற்றிற்கு செய்யப்படும் முதலீட்டிற்கான வட்டி கட்டிடத் தேய்மானம் முதலியவற்றினை எல்லாம் நீங்கள் கணக்கிலெடுக்க வேண்டும். மாடு வைத்திருந்தீர்களானால் வருடம் 365 நாட்களுக்கும் ஒய்வு கிடையாது என்பதையும் கணக்கில் கொள்ளுங்கள். ஒரு சாதரண அரசு பணியாளர் அலுவலக உதவியாளர் மாதம் சுமார் 15000/- பெறுகின்றார் இலஞ்சமாக சுமார் பதினைந்தாயிரம் பெறுவார். நீங்கள் அவர் பெறும் ஊதியத்தினை மட்டும் கணக்கில் வையுங்கள். எல்லா விடுப்புகளும் போக மாதத்தில் பதினைந்து நாட்கள் மட்டுமே அவர் உழைக்கின்றார். அதாவது ஒரு நாளைக்கு சுமார் 6 மணி நேரத்திற்கு ரூ1000/- பெறுகின்றார். ஒரு மாட்டிற்கு சுமார் 1 மணி நேர உழைப்பினைக் கணக்கிட்டாலும் சுமார் 160 கூலியாக மட்டும் கொடுக்க வேண்டும். மேலும் முதலீட்டிற்கான வட்டியினைக் கணக்கிடுங்கள். இதையெல்லாம் கணக்கிட்டு பால் விலை நிர்ணயம் செய்யபட்டால் மட்டுமே கறவை மாடுகள் வளர்க்க முடியும். குறைந்த பட்சம் ரூ 40 கொள்முதல் விலையாக நிர்ணயம் செய்யப்பட்டால் மட்டுமே வணிக ரீதியில் பால் உற்பத்தி சாத்தியம்.
No comments:
Post a Comment