Friday, April 25, 2014

தமிழ்நாட்டில் இது வரை நடந்த தேர்தல்களில் இல்லாத அளவிற்கு இந்த முறை அதிமுக அமைப்பு ரீதியாகவும் திட்டமிட்டும் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்துள்ளது. இது மக்களை நேரடியாகச் சந்தித்து நான் கண்டு கொண்ட உண்மை. சுமார் 50 முதல் 60 % வரையிலான பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டிருக்கின்றது என்று நான் கணிக்கின்றேன். 500 கோடி முதல்1000 கோடி வரையிலான தொகை இந்தப்பட்டுவாடாவிற்க்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.இப்படி அமைப்புரீதியாகவும்  திட்டமிட்டும் செய்யப்பட்டிருக்கும்  இந்த தமிழக தேர்தல் வரலாற்றின் மாபெரும் குற்றத்திற்கு எதிராக ஏன்  அரசியல் தலைவர்கள் யாருமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது புதிராக இருக்கின்றது.  தமிழக ஆளுங்கட்சியின் இந்த மாதிரியான செயல்களை அனைவரும் ஆதரிக்கின்றனரா? தமிழகத்தின் 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலுமே வெளிப்படையான நேர்மையான தேர்தல் நடக்கவில்லை. இந்த 39 நாடாளுமன்றத் தேர்தல்களையும் இரத்து செய்து விட்டு மறு தேர்தல் நடத்த வேண்டும். எல்லாத் தேர்தல்களிலும் தவறுகள் நடக்கின்றன. இந்தத் தேர்தலில் அதை அமைப்பு ரீதியாகச் செய்த பெருமையை அதிமுக அடைகின்றது. தமிழகத்தில் திருமங்கலம் பார்முலா என்ற வார்த்தையை திமுக அறிமுகம் செய்தது. திமுக அரசு செய்த திட்டங்களை நடைமுறைப்படுத்தாத அதிமுக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் முறையை மட்டும் திமுகவிடமிருந்து பின்பற்றுகின்றது. மக்கள் என்ன நினைக்கின்றார்கள்? மக்கள் பெரிதாக அதிர்ச்சி அடைந்த மாதிரி தெரியவில்லை. பணம் மக்களின் மனத்தினை மாற்றிவிடாது என்று அணைவரும் நினைக்கின்ற மாதிரி தான் தெரிகின்றது. சில சாதரண அதிமுக தொண்டர்கள் கூட பணம் வாங்க மறுத்து  தாங்கள் மிகவும் கண்ணியமானவர்கள் என்று காட்டினார்கள் . எம்ஜிஆர் வாக்கு வங்கி என்பது தற்போது இல்லை என்று சூழல் தான் பணம் கொடுத்ததால் ஆகியிருக்கின்றது. கிராமங்களில் வாக்களிப்பது தங்கள் கடமை என்றே மக்கள் நினைக்கின்றார்கள். அன்பு மரியாதை இவற்றின் காரணமாக தாங்கள் சார்ந்த இயக்கத்திற்கு மிகுந்த ஆர்வத்தோடு வாக்களித்த கிராம மக்கள் இந்த முறை அதிர்ச்சி அடைந்து விட்டார்கள். உண்மையான அதிமுக தொண்டர்கள் மனவேதனை அடைந்து விட்டார்கள். இவற்றை எல்லாம் மீறி ஒரு உண்மை இருக்கின்றது. தங்கள் விலையற்ற அரசியல் உரிமையான வாக்குகளை விலைபேசி அளவிற்கு வருமை இருக்கின்றது என்பது தான் அந்த உண்மை.

No comments:

Post a Comment