சத்திய மூர்த்தி பவனில் காங்கிரஸ் ஆதரவாளர்கள் கூட்டத்தினை கூட்டி கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை விவாதிக்க வேண்டும். ஜெயலலிதா தலைமையிலான அரசு எல்லாவிதத்திலும் தோல்வியடைந்துவிட்டது . மின்வெட்டு மோசமான சாலைகள் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தாலும் வேலைகள் நடப்பதில்லை காவல் துறை மக்களை மதிப்பதில்லை. உள்ளாட்சியில் வீடுகட்ட குடிநீர் இனைப்புக்கு இலஞ்சம் காவல் துறையில் இலஞ்சம் மின்சாரத்துறையில் இலஞ்சம் கூட்டுறவுத்துறை சீரழிந்து விட்டது. புதிய நீர்ப்பாசன திட்டங்கள் குடிநீர் திட்டங்கள் எதுவுமில்லை . மக்களுக்கு பணம் கொடுத்து தேர்தலில் ஜெயிக்கும் அவலம். அமைச்சர்களும் அதிகாரிகளும் சுயமாக எந்த முடிவும் எடுக்க முடியாமல் சுயமரியாதையும் இல்லாமல் அமைச்சர்கள் அதிகாரிகளுக்கு வேண்டிய கம்பீரமும் இல்லாமல் பதவிக்காக நடைப்பிணமாக நடமாடுகின்றனர். தொழிலதிபர்கள் விவசாயிகள் பால் உற்பத்தியாளர் யாரும் தங்களது ஆட்சியாளர்களை சந்திக்க முடியாது என்ன நாடு இது. காமராஜர் மாதிரி அருமைத் தலைவர்களை உருவாக்கிய காங்கிரஸ் மக்களோடு மக்களாக மக்களுக்காக போராடிய காங்கிரஸ் இன்னும் ஏன் தூங்கிக் கொண்டிருக்கின்றது . அகில இந்திய அளவில் ஆதிக்கம் செலுத்திய தமிழகம் தனது ஆதிக்கத்தினை இழந்து விட்டது. ஏ தாழ்ந்த தமிழகமே ஒட்டுக்காக தன்னையே விற்ற தமிழகமே பதவிக்காக பாதம் பணிந்து கிடக்கும் தமிழகமே என்று தமிழகத்தினை பார்த்து காங்கிரஸ்காரன் கண்ணீர் விடுகின்றான் . எத்தனை அறிவாளிகள் பேசிய சபை. மேசை தட்டும் முட்டாள்கள் அந்த சபையை அலங்கரிக்கலாமா? தீரர் சத்தியமூர்த்தி பவனிலிருந்து நமது போராட்டம் தொடங்கட்டும் . காமராசர் சிசுப்பிரமணியம், கக்கன் எத்தனை அருமையான தலைவர்கள் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் நண்பர்களே.தேர்தல் சீக்கிரம் வந்து விடும் .கூட்டணி கனவில் இருப்போர் எந்த கட்சியுடன் கூட்டு சேர விரும்புகின்றீரோ அந்தக் கட்சியில் போய் சேர்ந்து விடுங்கள். உண்மையான கட்சிக்காரர்கள் தமிழகத்தின் நலன் காக்க தமிழ்நாடு காங்கிரஸ் நலன் காப்போம்
No comments:
Post a Comment