தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் 07.06.2014 கூட்டப்பட இருப்பதாக சில பத்திரிக்கைச் செய்திகள் கூறுகின்றன. அந்தக் கூட்டத்தில் அதிமுக அரசின் செயல்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டு அதிமுக அரசிற்கு எதிராக மக்கள் கருதும் விஷயங்கள் பற்றி தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும் 1. செயற்கையான மணல் தட்டுப்பாடு மற்றும் மணல் கொள்ளை சாதரண மக்களை கடுமையாக பாதித்துள்ளது . முக்கிய கனிம வளமான மணல் விற்பனை சீராக இல்லை.தமிழக அரசுக்கு மணல் கொள்ளையர்களை அடக்கும் சக்தி இல்லை என்பதையே இது காட்டுகின்றது.
2. தமிழ் நாடெங்கும் நிலவும் தண்ணீர் பஞ்சத்தினை போக்க தமிழ்நாடு அரசுக்கு தலைமை தாங்கும் அதிமுக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3. புதிதாக அதிமுக அரசு மதுக்கடைகளை திறக்கும் போது அந்தப் பகுதி மக்கள் போராடுவதும் அந்தப் போராட்டங்களை துப்பாக்கி முனையில் நசுக்கி மதுக்கடைகளை திறப்பதும் அதிமுக அரசின் வாடிக்கையாக இருக்கின்றது. ஜெயலலிதா தேர்தல் சமயத்தில் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவதாக வாக்களித்தார். அந்த வாக்குறுதியை இப்போது நிறைவேற்ற வேண்டும்.
5.தமிழ்நாட்டில் நீண்ட காலத்திற்கு பின்னர் விவசாயிகளின் தற்கொலைசெய்திகள் வருவது வருத்தமளிப்பதாக உள்ளது. அரசாங்கம் நெல், கரும்பு கொள்முதல் விலைகளை உயர்த்தவும் பால் கொள்முதல் விலையை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6. சிறு தொழில்களையும் விவசாயிகளையும் பாதிக்கும் மின்வெட்டிற்கு தீர்வு காண தமிழக அரசு தவறி விட்டது. ஆட்சிக்கு வந்த 6 மாதத்திற்குள் மின்வெட்டுப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக அதிமுக சொன்னது ஆயின ஆண்டுகள் மூன்று மின்வெட்டு அதிகரித்துள்ளதே தவிர குறைந்தபாடில்லை.
7. தமிழகத்தின் முக்கிய துறைகளில் உள்ள ஆட்கள் பற்றாக்குறையினால் மக்கள் அவதிக்குள்ளாகின்றார்கள். அனைத்து துறைகளில் காலியான பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
8. தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறை முதல் அனைத்து துறைகளிலும் இலஞ்சம் தலைவிரித்தாடுகின்றது. இலஞ்ச ஊழல் தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதில்லை இது கண்டணத்திற்குரியது .
9. தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் குடியிருக்கும் இடங்களுக்கு பட்டா வழங்குவதில் மிகுந்த முறைகேடு நடக்கின்றது.
10. தமிழக சாலைகளின் நிலைமை மோசமாகி வருகின்றது. உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் தமிழக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை.
11. தமிழக சட்ட ஒழுங்கு நிலைமை மிகவும் சீர் கெட்டுவிட்டது தமிழக முதலமைச்சர் தலைமையில் இயங்கும் போலீஸ் துறை மிகவும் மோசமான முறையில் பணி செய்கின்றது.
12. பாராளுமன்றத் தேர்தலில் பணம் விளையாடியது தான் காங்கிரஸ் தோல்விக்கு காரணம். தமிழகத்தில் பாரதிய ஜனதாவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை என்பதை பாராளுமன்ற தேர்தல்கள் காட்டுகின்றன.
14. வர இருக்கின்ற சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுகவிற்கு ஒரே மாற்று காங்கிரஸ் தான். காங்கிரஸ் தலைமையில் வலுவான அணியினை உருவாக்க காங்கிரஸ் முயற்சியெடுக்கும்.
15. காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அவர்களின் மீதும் துனைத்தலைவர் இராகுல் காந்தி அவர்களின் தலைமை மீதும் தமிழ்நாடு காங்கிரஸ் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது.
No comments:
Post a Comment