புராதன காலத்து இந்திய குற்றவியல் சட்டத்தின் சில பிரிவுகள் என்னை ஆச்சரியப்படுத்துகின்றன. அரசு ஊழியர்களைப் பணி செய்யாமல் தடுத்தலைக் குற்றமாகக் கருதும் பிரிவுகள் அவற்றில் சில. அன்னிய நாட்டிலிருந்து வந்த வெள்ளையர்களின் பாதுகாப்பிற்காக கொண்டு வரப்பட்ட இந்தப் பிரிவுகள் ஏன் இன்னும் நீடிக்கின்றன? சுதந்தர இந்தியாவில் அரசு ஊழியர்கள் கடமையைச் செய்யாமல் இருப்பது அல்லவா குற்றமாகக் கருதப்பட்டிருக்க வேண்டும். அப்புறம் இந்தக் பிரிவுகளில் குற்றச் சாட்டப்படுவோர் அரசு ஊழியர்கள் கடமையைச் செய்ய மறுத்ததனாலோ ஆணவத்துடன் செயல் படுவதாலோ கோபம் கொண்டோர் தான். யாரும் அரசு ஊழியர்களின் கடமையை தடுக்கின்ற மாதிரி தெரியவில்லை.இன்றைய அரசு ஊழியர்களின் என் கடன் சம்பளம் வாங்குவது அதைவிட இலஞ்சம் வாங்குவது மக்களை அடிமைகள் மாதிரி நடத்துவது என்று நடந்து கொள்கின்றனர். இவர்களுக்கு இந்த வெள்ளைக்காரன் காலத்து குற்றவியல் சட்டத்தின் சில பிரிவுகள் நன்கு உதவுகின்றன. ஆனால் அரசு ஊழியர்கள் கடமையைச் செய்யாமலிருத்தல் யாராலும் குற்றமாகக் கருதப்படுவதில்லை நல்ல வேடிக்கை தான். நாம் தான் சட்டம் இயற்ற தமிழ்நாடு சட்ட மன்றத்திற்கு 234 பேரையும் இந்திய பாராளுமன்றத்திற்கு 545 பேரையும் அனுப்பி வைக்கின்றோம். அவர்கள் இந்த சட்டத்தினை எல்லாம் ஆய்வு செய்வதில்லையா என்று கேட்கின்றீர்களா? ஆனது ஆண்டுகள் அறுபது ஆனால் இந்த மாதிரியான பிரிவுகள் எந்த உறுப்பினர் கண்ணிலேயும் படவில்லையே?
No comments:
Post a Comment